திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 79,797 பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பூர், டிச.5:  திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 79,797 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதை கடந்த 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 பேருக்கு முதல் தவணையும், 4 லட்சத்து, 85 ஆயிரத்து 81 பேருக்கு இரண்டாம் தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியது உள்ளது. இந்தநிலையில் நேற்று 13ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக 604 மையம், 41 நடமாடும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வழக்கமாக இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடக்கும். நேற்றைய முகாம் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை மட்டுமே நடைபெற்றது. இதில் 79 ஆயிரத்து 797 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தில் 27 லட்சத்து 31 ஆயிரத்து 978 பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More