திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம்

திருப்பூர், டிச. 5: திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ‘சிறப்பு கால்டை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்’ நடத்தும் திட்டம் 2021-2022-ம் நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற் புழுநீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள்  இலவசமாக அளிக்கப்பட உள்ளது. கோழிகளும் இதில் அடங்கும்.

இத்திட்டமானது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம், 260 முகாம்கள் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஒவ்வொரு கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடத்தப்பட உள்ளது. இதை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

Related Stories:

More