திமுகவில் இணைந்த அதிமுகவினர்

பொள்ளாச்சி,டிச.5: பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோவில்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரும், இளைஞர் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த சுரேஷ் தலைமையில், அதிமுகவை சேர்ந்த பலர் அக்கட்சியிலிருந்து  விலகி, கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், நகர கழக பொறுப்பாளர் வடுகை பழனிசாமி, மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் நவநீதகிருஷ்ணன், கலை இயக்கிய பகுத்தறிவு பேரவை சதீஸ், ஒன்றிய பொறுப்பாளர் துரை,ஊராட்சி உறுப்பினர் சக்திவேல், தொண்டரணி பாலகிருஷ்ணன், மகளிர் தொண்டரணி மங்கையர்கரசி,ஒன்றியக்குழு உறுப்பினர் சத்தியபாமா,குரும்பை கனகராஜ், நகரதுணை செயலாளர் கார்த்திகேயன்,தொழிற்சங்க தலைவர் சிராஜூதின்,கண்ணுசாமிஉள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலப்பொருட்கள் விலை உயர்வை  கண்டித்து மாநிலந்தழுவிய போராட்டம்

பீளமேடு,டிச.5: தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் (டான்சியா) துணைத் தலைவர் சுருளிவேல் கூறியதாவது: தமிழகத்தில் 34 மாவட்டங்களில் 600 தொழில் அமைப்புகளின் கீழ் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றின் மூலம் சுமார் 5 லட்சம் பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். மேலும் அலுமினியம்,  இரும்பு,செம்பு உள்ளிட்ட பொருட்களின் விலை 140 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான சிறு,குறு தொழில் துறையினர் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்த பிரச்னையில் ஒன்றிய  அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக போராட்டம் நடத்த உள்ளோம்.அதுகுறித்து வருகிற 11ந் தேதி  சேலத்தில் மாநில அளவில் 600 தொழில் அமைப்புகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: