நெடுகுளா ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி கற்றல் மையம் துவக்கம்

ஊட்டி, டிச. 5: கோத்தகிரி ஒன்றியம் நெடுகுளா ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி, கற்றல் மையத்தின் துவக்க விழா நடந்தது. ஊர்த்தலைவர் பெள்ளன் தலைமை வகித்தார். கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெய்சங்கர், சமக்ரா சிக்ஷா மாவட்ட உதவித் திட்ட அலுவலர் குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராமசந்திரன், பிரியா, நாகஜோதி, பள்ளி மேலாண்மை குழு தலைவி நித்யகல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதவி திட்ட அலுவலர் குமார் பேசுகையில், கடந்த ஒன்றறை ஆண்டுகளாக கொரோனா காலத்தில் குழந்தைகள் இழந்த கல்வியை, கற்றல் இழப்பினை, கற்றல் இடைவெளியை முற்றிலும் குறைக்க, நீக்க அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் நெடுகுளா ஊர் மையத்தில் சிறப்பாக செயல்பட பெற்றோர், மகளிர், பொதுமக்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார். தொடர்ந்து மையத்திற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத், மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் மனோஜ்குமார், ஊர் பூசாரி பாபு, ஆசிரியர்கள் காரி, பிரேமா  உள்பட பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 திட்டம் செயல்படுத்தும் அடுத்த 6 மாத காலம் மையத்தில் கற்கும் மாணவர்களுக்கு, தங்கள் செலவில் நாள்தோறும் தேநீர் வழங்க முன்வந்த நூலகர் சந்திரன், தன்னார்வலர் தீபா வடிவேல், முருகன் ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.

Related Stories: