சட்டம் ஒழுங்கு பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பரிசு

ஊட்டி, டிச. 5: குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்ட காவல்துறை மாதந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட எஸ்பி ஆசிஸ்ராவத் தலைமை வகித்தார். இதில் டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், குற்ற தடுப்பு, சட்டம் ஒழுங்கு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு வெகுமதிகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன் ஊட்டி ஆம்ஸ் அவுஸ் சாலையில் ரூ.50 ஆயிரம் கிழே விழுந்து கிடந்துள்ளது. அதனை திவினேசன் என்பவர் எடுத்து ஊட்டியில் உள்ள மத்திய காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளார். இவரை பாராட்டி, அவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதேபோல், ஊட்டி ஏடிசி பகுதியில் சாலையில் கிடந்த ரூ.15 ஆயிரத்தை எடுத்து நகர் மத்திய காவல் நிலையத்தில் மூர்த்தி என்பவர் ஒப்படைத்துள்ளார். இவரையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories: