நீர்பனி தாக்காமல் இருக்க அலங்கார செடிகளுக்கு மிலார் செடிகள் கொண்டு பாதுகாப்பு

ஊட்டி, டிச. 5: நீலகிரி மாவட்டத்தில் நீர் பனியில் இருந்து பாதுகாக்க அலங்கார செடிகள் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நீர் பனியும், நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் உறைப்பனி விழத்துவங்கும். ஆனால், இம்முறை தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி தற்போது வரை பெய்துகொண்டே இருக்கிறது.

கடந்த 3 நாட்களாக காலநிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வெயில் அடிக்கிறது. இதனால், நீர் பனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பனியால் ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள அலங்கார செடிகள் பனியில் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளிலும் உள்ள அலங்காரடி செடிகள் மற்றும் மலர் செடிகள் கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

Related Stories: