விருப்ப மனு இளம் தொழில் முனைவோருக்கு கொங்கு பொறியியல் கல்லூரி ரூ. 26 லட்சம் நிதி உதவி

ஈரோடு, டிச.5: பெருந்துறை, கொங்கு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்களான  எம்.புவியரசன், எம்.ப்ரனேஷ் ஆகியவர்கள் டயனேற்றல் டெக் பிரைவேட் லிமிடெட் என்ற  நிறுவனத்தினை நடத்தி வருகின்றனர். இவர்களின் கண்டுபிடிப்பான “ஐ.ஐ.ஓ.டி 4.0-ரெர்ப்பீ” என்பதை வணிகமயமாக்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 26 லட்சம் வழங்கப்பட்டது.  இதற்கான உத்தரவையும், காசோலையையும் டிபிஐ தலைவர் பி.சி.பழனிசாமி, கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதானந்தன், முதல்வர் முனைவர்.வீ. பாலுசாமி ஆகியோர் முன்னாள் மாணவர்களிடம் வழங்கினர்.

இத்திட்டத்தின் கீழ் இளம் தொழில் முனைவோர்கள் தங்களது திட்டத்திற்கு ஏற்ப குறைந்த வட்டியில் ரூ. 50 லட்சம் வரை கடனாக பெறலாம். இதுவரை இந்த அமைப்பின் மூலம்  54 இளம் கண்டுபிடிப்பாளர்கள் ரூ. 6.58 கோடி கடனாக  மற்றும் மானியமாகப் பெற்றுள்ளனர். தொழில் முனைவோர்கள் தங்களது கனவுகளை நினைவாக்க கொங்கு பொறியியல் கல்லூரியின் டிபிஐ பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த திட்டங்களை பற்றிய முழு விபரங்களுக்கு நேரிலோ  www.tbi-kec.org என்ற வலைத்தளத்தையோ அணுகலாம்.

Related Stories: