ேகாவிட் பரிசோதனை செய்வதாக மூதாட்டியிடம் 16 சவரன் பறிப்பு

எம்கேபி நகர் 14வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி (68), நேற்று வீட்டில் இருந்து முல்லை நகர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றபோது, முகக்கவசத்துடன் வந்த 2 பேர், ஜெயலட்சுமியை மறித்து, நாங்கள் மாநகராட்சி கொரோனா பரிசோதனை நிலையத்தில் இருந்து வருகிறோம். தற்போது அதிக அளவில் கொரோனா பரவி வருவதால், வீதி வீதியாக சென்று கொரோனா பரிசோதனை செய்கிறோம். உங்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கூறி, அதே பகுதியில் தனியாக ஒரு இடத்திற்கு ஜெயலட்சுமியை அழைத்து சென்றனர்.

அங்கு, ‘நீங்கள் அணிந்துள்ள நகைகளை கழட்டி பையில் வைத்துக்கொள்ளுங்கள். பரிசோதனை முடிந்ததும் போட்டுக் கொள்ளலாம் எனக்கூறியுள்ளனர். அதன்படி, ஜெயலட்சுமி தனது 9 சவரன் செயின், 7 சவரன் வளையல் என மொத்தம் 16 சவரன் நகைகளை கழற்றி பையில் வைத்தபோது, அவருக்கு உதவி செய்வது போல் நடித்து, அவரது 16 சவரன் நகைகளை அபேஸ் செய்து, அங்கிங்கிருந்து தப்பினர்.    

Related Stories: