குடும்ப பிரச்னையில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை பலாத்காரம் செய்து 5 சவரன் தாலி செயின் அபேஸ்: வாலிபர் கைது

சென்னை, டிச.4: தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியை சேர்ந்த ராணி (37, பெயர் மாற்றப்பட்டுள்ளது), விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரில், ‘எனது மகளுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று முன்தினம் எனது மகள், வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் உள்ள தாத்தா வீட்டிற்கு தனியாக வந்துள்ளார்.  அப்போது, தாத்தா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் பூந்தமல்லி ஜெம்ஸ் ெதருவை சேர்ந்த முத்துராஜ் (24) என்பவருக்கு எனது மகள் போன் செய்துள்ளார்.

அவர், எனது மகளை கோயம்பேட்டில் இருந்து அழைத்து ெசன்று, சாலிகிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்க வைத்து, ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், எனது மகள் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயினை பாலிஷ் போட்டு தருவதாக வாங்கி சென்றுள்ளார்.

பின்னர், அந்த செயினை போன்று கவரிங் செயின் வாங்கி வந்து, மகளிடம் கொடுத்து கோயம்பேடு அழைத்து வந்து, பேருந்தில் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டிற்கு வந்த மகளின் கழுத்தில் அணிந்து இருந்த செயின் வித்தியாசமாக இருந்ததால், இதுபற்றி கேட்டபோது, எனது மகள் நடந்த சம்பவத்தை கூறினார். எனவே எனது மகளை ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து, 5 சவரன் செயினை பறித்த முத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறியிருந்தார்.

போலீசார், முத்துராஜை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ராணியின் மகளுடன் உல்லாசமாக இருந்து 5 சவரன் செயினை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, முத்துராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More