மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் கேக் வெட்டிய கலெக்டர்

செங்கல்பட்டு, டிச.4: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் சிஎஸ்ஐ மகிமை இல்லம் சார்பில், உலக மாற்றுத்திறனாளி தினம் மகிமை இல்லத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அங்கு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன்,  கலெக்டர் ராகுல்நாத், கேக்  வெட்டி கொண்டாடினார். நிகழ்ச்சியில் உரையாடல் திறன் நிபுணர் ஞானரத்தினராஜ், மூச்சு பயிற்சியாளர் பிரபாகரன், செயல்திறன் அலுவலர் கண்ணன், தொழில்நுட்ப அலுவலர் ப்ரீத்தி, உதவி வரவேற்பாளர் குமார், சிஎஸ்ஐ மகிமை இல்ல  நிர்வாகி கிறிஸ்டினால் சிகரம், பள்ளி தலைவர் பாஸ்டர் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர்: முட்டுக்காட்டில் இயங்கும் மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிறுவன தலைவர் நச்சிகேதா ரவுட் தலைமை தாங்கினார். கொரோனா தொற்றுக்குப் பின் உலகத்தை உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் நிலையான வளர்ச்சியை அடைவதில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு என்ற தலைப்பில் பாட்டு, ஓவியம், விளையாட்டு, சமையல், கோலம் உள்பட பல போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன் வழங்கினார். மேலும், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனாட்சி மாநில, இந்திய அளவில் சுயதொழில் புரிந்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சிபிசிஎல் நிறுவன துணைப் பொது மேலாளர் ரவிக்குமார், உயர் மேலாளர் பிரதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: