திருச்சியில் இன்று 200 இடங்களில் தடுப்பூசி முகாம்

திருச்சி, டிச.4: தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அதன்படி திருச்சி மாநகரில் இன்று 65 வார்டுகளிலும் 200 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு முகாமிற்கும் தலா 700 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மட்டும் 1.40 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. தடுப்பூசி போடாதவர்கள் முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் தெரிவித்துள்ளார். இதேபோல் மாவட்டத்தில் 321 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More