இன்று முதல் பகல்பத்து ஆரம்பம் மிரட்டி வரும் ஒமிக்ரான் வைரஸ் ‘மாஸ்க்கை மறந்த மக்கள்’ அபராதம் விதிக்க கோரிக்ைக

திருச்சி, டிச.4: ஒமிக்ரான் வைரஸ் மிரட்டி வரும் நிலையில், திருச்சியில் மாஸ்க் அணியாமல் சுற்றித்திரியும் நபர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். முக்கியமாக, மக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூருவில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார், பெரிய கடைவீதி, சின்னக்கடை வீதி மற்றும் அனைத்து கடை வீதிகள், பஸ், ரயில் நிலையங்களில் 95 சதவீதம் பேர் மாஸ்க் அணியாமல் செல்கின்றனர். மேலும், வழிபாட்டு தலங்களுக்கும் மாஸ்க் அணியாமல் சென்று வருகின்றனர். ரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பெரிய கடைவீதிக்கு வரும் பெரும்பாலான பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் வருகின்றனர். மக்கள் அஜாக்கிரதையாக இருக்க கூடாது, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர். மாஸ்க் அணியாமல் சுற்றுபவர்களுக்கு போலீசார் அதிகளவில் அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

19 ஆண்டுகளுக்கு பிறகு...

அமாவாசை, பவுர்ணமி துவங்கியதில் இருந்து 11ம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப்படுகின்றன. ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். இதில் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். 3 கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாக கூறி நம்பெருமாள் அருளியதாக ஐதீகங்கள் கூறுகின்றன. அந்த தினமே வைகுண்ட ஏகாதசியாக பெருமாள் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. விஜயநகர பேரரசு காலத்தில் மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், தை முதல் பகுதியில் தை திருநாளும் வந்தது. இதை எப்படி கொண்டாடுவது என கேள்வி வந்த போது, அப்போது  மணவாள மாமுனிகள் சொன்னபடி வைகுண்ட ஏகாதசி திருவிழா கார்த்திகையில் வந்தது. அதேபோல் 19 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கார்த்திகையில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

Related Stories: