திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு வடமாநில தொழிலாளி பலி

திருப்பூர்,  டிச.4: திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு வடமாநில தொழிலாளி பலியானார். 11  பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். திருப்பூர்  மாநகர் மற்றும் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி 11  பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி  செய்யப்பட்டது. அவர்கள் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் சிறப்பு வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  திருமுருகன்பூண்டியில் வசித்து வந்த 27 வயதான ஜார்க்கண்ட்  மாநிலத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி ஒருவர் டெங்கு காய்ச்சலால்  பாதிக்கப்பட்டார்.

இவர் கடந்த சில நாட்களாக கோவை அரசு கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்பு  பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், தூய்மை பணியாளர்கள் மூலம் வார்டுகள்  தோறும் கொசு மருந்து அடிக்கும் பணி தொடங்கி உள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Related Stories: