157 வாகனங்கள் 8ம் தேதி ஏலம்

கோவை, டிச.4: கோவை மாவட்ட போலீசாரால் மதுவிலக்கு குற்றங்களில் 5 ஆறு சக்கர வாகனங்கள், 17 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 133 இரு சக்கர வாகனங்கள் என 157 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வரும் 8ம் தேதி காலை 10 மணிக்கு கோவை அவினாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.

ஏலத்தில் விடப்படும் வாகனங்கள் பொள்ளாச்சி வெங்கடேசா காலணியில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், கோவில்பாளையம் தேவம்பாளையம் பாலாஜி நகரிலுள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், சூலூர், மதுக்கரை,க.க.சாவடி, செட்டிபாளையம், தொண்டாமுத்தூர், அன்னூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி தாலுகா, கோமங்கலம், நெகமம் மற்றும் வால்பாறை போலீஸ் ஸ்டேஷன் வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 7ம் தேதி மாலை 5 மணி வரை வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். வாகனங்கள் ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (GST) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென கோவை மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: