மேகதாதுவில் அணை கட்டுவதை ஒரு ேபாதும் அனுமதிக்கமாட்டோம்: காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர், டிச.4: மேகதாதுவில் அணைகட்டுவதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என்று காட்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ₹46.49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் துரைமுருகன் பேசினார்.  வேலூர்  விஐடியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசியதாவது:  சமுதாயத்தில் நல்லவர்கள், தீயவர்கள் என்று கலந்திருப்பார்கள். அதேபோன்று நோயற்றவர்களும், பிறக்கும்போதே நோய் உள்ளவர்களும் இருப்பார்கள். நலமுடன் இருப்பவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதை விட, நோயால் பாதித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து உதவி செய்பவர்கள் தான் சிறந்த ஆட்சியாளர்கள். ஒரு காலத்தில் குஸ்ட்ரோகம் இருந்தவர்களை சாலையில் கூட நடந்து செல்ல அனுமதிக்காமல் இருந்தனர். ஆனால் கலைஞர் ஆட்சியில் அவர்களை தேடி கண்டறிந்து தொழுநோய் இல்லம் என்று அவர்களுக்காக அமைத்து தேவையான உதவிகளை செய்து கொடுத்தார்.

அந்த நோயை நாளடைவில் முற்றிலுமாக ஒழித்தார். கண்கள் இல்லையென்றால் வாழ்வில் இருள் சூழ்ந்துவிடும். எனவே, அவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டத்தை கலைஞர்தான் தொடங்கி வைத்தார். பிள்ளைகள் கவனிக்காமல் விட்டுச்சென்ற பெற்றோருக்கு முதியோர் இல்லம் மூலம் மறுவாழ்வையும் ஏற்படுத்தி கொடுத்தார். நாட்டில் எந்த பிரச்னை இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதை நிறுத்தக்கூடாது. ஊனமுற்றோர் என்ற பெயரை மாற்றுத்திறனாளிகள் என மாற்றியவரும் கலைஞர் தான். சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்களை கைதூக்கி விடுபவர்கள்தான் சிறந்த ஆட்சியாளர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ெதாடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், 4 பேருக்கு பேட்டரி சக்கர நாற்காலிகள், 6 பேருக்கு விரிவான காப்பீடு திட்டத்தின்கீழ் நவீன செயற்கை கால்கள், 2 பேருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் மற்றும் கடுமையாக பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை என மொத்தம் 46.49 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  நிகழ்ச்சியில் டிஆர்ஓ ராமமூர்த்தி, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் ேகக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர். ேமலும் தமிழக முதல்வர் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் ெதாடங்கி வைத்த நிலையில் நேற்று வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மொத்தம் 1,061 தொழிலாளர்களுக்கு 15.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ெதாழிலாளர் இணை ஆணையர் புனிதவதி, உதவி ஆணையர் தாமரை மணாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கக்கூடாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் இருப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கியபிறகே ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். காவேரி- குண்டலாறு அணையை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக அமைச்சர் கூறுகிறார். இது மத்திய அரசின் திட்டம். எனவே மத்திய அரசு அவர்களை சமாதானம் செய்வார்களோ, அல்லது வேறுவழியை கையாளுவார்களோ அது அவர்கள் கவனித்துக்கொள்ளுவார்கள்.  அதேபோன்று மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் நீர் தேக்கக்கூடாது. தேக்கினால் எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்கப்படும். தமிழகத்தில் ெமாத்தம் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும். முதற்கட்டமாக 100 தடுப்பணைகள் கட்டப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: