1,230 பேர் மீது வழக்கு

நாகர்கோவில், டிச.4 : கன மழை காரணமாக வேலையிழந்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் வடசேரி, திங்கள்சந்தை, ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், கொல்லங்கோடு, கேசவன்புதூர், பறக்கை, முஞ்சிறை, குழித்துறை உள்பட 16 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த மறியல் தொடர்பாக 558 பெண்கள் உள்பட 1,230 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். தற்போது இந்த மறியல் போராட்டம் தொடர்பாக அந்தந்த காவல் நிலையங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தடை மீறி கூடுதல், ெபாதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், தொற்று பரவல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில், 1230 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: