நாகூரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை கலெக்டர் ஆய்வு

நாகை, டிச.4: நாகை மாவட்டம் நாகூரில் கனமழையால் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று ஆய்வு செய்தார். நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நாகூர் வள்ளியம்மை நகர், அமிர்தாநகர், அழகுகாரன் தோட்டம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதேபோல் அம்பேத்கர் நகரில் உள்ள சுனாமி குடியிருப்புகளில் கனமழையால் வீடுகள் சேதமடைந்துள்ளது. மழைநீர் சூழ்ந்த பகுதிகளை நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் வள்ளியம்மை நகர், அமிர்தா நகர், அம்பேத்கர்நகர் ஆகிய இடங்களில் நடந்த மருத்துவ முகாம்களையும் பார்வையிட்டார். நாகூர் பகுதிகளை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.  தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், எம்எல்ஏ முகமதுஷா நவாஸ், நகராட்சி ஆணையர் தேவி, ஆர்டிஓ மணிவேலன், நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன், தாசில்தார் ஜெயபால் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: