உழவர்சந்தை லாலாப்பேட்டை அரசு பள்ளியில் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் குளத்தில் நிரம்பி வழியும் தண்ணீர்

குளித்தலை, டிச. 4: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர் மலையில் சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவில் எதிரே தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் பெய்யும் மழை தண்ணீர் தேங்கியிருக்கும். அதனைத்தொடர்ந்து கோடைகலங்களில் தண்ணீர் வற்றி விடும். மேலும் மழைத் தண்ணீர தெப்பக்குளத்திற்கு வருவதற்கான வடிகால் வசதிகள் ஏற்படுத்தி இருந்தும் தனிநபர்கள் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வீணாக வெளியே சென்றது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து அறநிலைய தறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் எம்எல்ஏ மாணிக்கம், அறநிலைய துறை அதிகாரிகள் ரோப்கார் திட்டத்தை ஆய்வு செய்து மலை உச்சிக்கு சென்று சுவாமிதரிசனம் செய்தனர்.

அப்போது அமைச்சர் தெப்பக்குளத்திற்கு ஏன் தண்ணீர் வரவில்லை எனக் கேட்டதற்கு ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிகாரிகள் பதில் கூறினர். இதனை கேட்ட அமைச்சர் சேகர்பாபு அறநிலைய துறை அதிகாரிகளிடம் உடனடியாக மலை உச்சியில் இருந்து வரும் தண்ணீர் தெப்பக்குளத்திற்கு செல்வதற்கு வசதியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உத்தரவிட்டு சென்றார். அதனை தொடர்ந்து நீர்வழிப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சமீபத்தில் பெய்த தொடர் மழையால் கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பக்குளம் நிரம்பி வழிகிறது. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தெப்பக் குளத்தில் நீர் நிரம்பியதால் சிறுவர்கள் ஆர்வத்துடன் தெப்பக் குளத்தில் குதித்து நீச்சல் அடித்து குளித்து வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களிலும், நடந்தும் வரும் பக்தர்கள் பாதுகாப்பு இல்லாத நிலையில் தெப்பக்குள படித்துறையை தாண்டித் தான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே தெப்பக்குளத்தை சுற்றி உள்ள நான்கு படித்துறைகளில் சுற்றுச்சுவர் அமைத்து பொதுமக்கள், பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி இரும்பு வேலி அமைக்க வேண்டும்.

தெப்பக்குளத்தை சுற்றியுளள நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணராயபுரம், டிச. 4: கிருஷ்ணராயபுரம் அருகே லாலாப்பேட்டை அரசு பள்ளியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் அருகே லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. உதவித் தலைமையாசிரியர் குருசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாலியல் மற்றும் மன ரீதியாக பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஜெயபால் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் லாலாபேட்டை போலீசார் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: