விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்

சிவகாசி, டிச. 3: விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச்செயலாளராக சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளராக புதுப்பட்டி கருப்பசாமி, தெற்கு ஒன்றிய செயலாளராக லட்சுமிநாராயணன், கிழக்கு ஒன்றிய செயலாளராக ஆரோக்கியம், மேற்கு ஒன்றிய செயலாளராக வெங்கடேஷ், ராஜபாளையம் வடக்கு நகர செயலாளராக துரைமுருகேசன், தெற்கு நகர செயலாளராக பரமசிவம், திருவில்லிபுத்தூர் நகர செயலாளராக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் வடக்கு ஒன்றிய செயலாளராக மச்சராஜா, திருவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக மான்ராஜ் எம்எல்ஏ, விருதுநகர் மேற்கு மாவட்ட விவசாய பிரிவு மாவட்ட செயலாளராக முத்தையா, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக பலராம், விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளராக தெய்வம் உட்பட பல்வேறு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதியநிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories:

More