பெரியகுளம் அருகே மரம் சாய்ந்து வீடு சேதம்

பெரியகுளம், டிச. 3: தொடர்மழையின் காரணமாக பெரியகுளம் அருகேயுள்ள கள்ளிப்பட்டியில் தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள புளியமரம் ஒன்று நேற்று முன்தினம் வேரோடு சாய்ந்தது. அந்த மரம் அருகில் இருந்த வீட்டின் கூரை மீது விழுந்ததால் வீடு இடிந்து சேதம் அடைந்தது. அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை. ஆனால், அந்தப் பகுதியில் இருந்த இரண்டு மின் கம்பங்கள் உடைந்து உயரழுத்த மின்கம்பி சேதமடைந்தது. இதனால்ல மதுராபுரி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட இந்த பகுதிகளில் 12 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தாமரைக்குளம் மின்துறை அலுவலர்கள் புதிதாக இரு மின்கம்பம் அமைத்து நேற்று மதியம் மின்சப்ளை கொடுத்தனர். அப்பகுதியில் இருவரது வீட்டின் சுற்றுச்சுவர் நொறுங்கியது. தகவலறிந்த வந்த நெடுஞ்சாலைத் துறையினர் அந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More