ஒன்றிய அரசை கண்டித்து கட்டுமான தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

போடி, டிச. 3: தேனி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து போடியில் மறியல் போராட்டம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் பிச்சைமணி மற்றும் போடி கிளை நிர்வாகிகளான செபஸ்தியார், மதியழகன், பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், பென்சன் ரூ. 3 ஆயிரம் உட்பட இதர பலன்களை உயர்த்திட வேண்டும், மாநில நல வாரியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும், கட்டுமான தொழிலாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் போடி சர்ச் தெருவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு போடி தலைமை தபால் நிலையம் முன்பாக முன்னறிவிப்பு இன்றி திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார், அவர்களை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் வழிமறித்து 129 பேரை கைது செய்தனர்.

Related Stories:

More