சுருளிப்பட்டியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

கம்பம், டிச. 3: சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் பொது மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவம், தோல் நோய்களுக்காங சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் போன்ற சிறப்பு மருத்துவம், இருதய மருத்துவம், இசிஜி, ரத்தப் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, கண் பரிசோதனை போன்றவைகள் நடைபெற்றது. சித்த மருத்துவ பிரிவின் சார்பாக மருத்துவர் சிராஜூதீன், மகப்பேறு சஞ்சீவி கர்ப்பிணி பெண்களுக்கு நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவைகளை வழங்கினார். இதில், வட்டார மருத்துவ அலுவலர் முருகன், ஒன்றிய செயலாளர் சூரியா தங்கராஜ் , ஒன்றியக்குழு தலைவர் பழனிமணி கணேசன், ஊராட்சி தலைவர் நாகமணி வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் தமயந்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மருந்தாளுநர் கணேசன் தலைமையில் மருந்துகள் வழங்கப்பட்டது. காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் யோகபிரதீஷ் ஏற்பாடுகளை செய்தார்.

Related Stories: