வாழ்வியல் திறன் விழிப்புணர்வு

தேவகோட்டை, டிச.3: தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலை பள்ளியில் வாழ்வியல் திறன்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி நிஷா வரவேற்றார். தலைமையாசிரியர் நாகேந்திரன் தலைமை வகித்தார். தேவகோட்டை டாக்டர்  ஜெயக்குமார் முன்னிலை வகித்து பத்து வாழ்வியல் திறன்கள் பற்றி மாணவ, மாணவிகளிடையே  உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் வரைந்த ஒருவனுக்கு ஒருத்தி, நல வாழ்வு, மது, மாதுவினால் ஏற்படக்கூடிய தீமைகள், எய்ட்ஸ் விழிப்புணர்வு  ஓவியங்கள் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. இதில் 6 முதல் 8ம் வகுப்பு வரை சிறப்பாக வரைந்த 6ம் வகுப்பு மாணவி ரம்யா முதல் இடமும், 7ம் வகுப்பைச் சார்ந்த அக்சயா இரண்டாம் இடமும், 9 மற்றும் 10ம் வகுப்பு பிரிவில் 9ம் வகுப்பைச் சார்ந்த மனோஜ் முதல் இடமும், சாந்திபாலா இரண்டாம் இடமும் பெற்றனர். இவர்களுக்கு பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஜே.ஆர்.சி. கவுன்சிலர் ஜோசப் இருதயராஜ்  தொகுத்து வழங்கினார். மாணவி சினேகா நன்றி கூறினார்.

Related Stories: