மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாடு

சிவகங்கை, டிச.3: சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை ஒன்றிய மாநாடு நடந்தது. விடுதலைராஜ் கொடி ஏற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர் வடிவேலு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் மதி வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் வீரபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கபூபதி பேசினர். ஒன்றிய செயலாளராக உலகநாதன் தேர்வு செய்யப்பட்டார். ஒன்றியக்குழு உறுப்பினர்களாக மதி, வேங்கையா, சுரேஷ், தனசேகரன், செல்லமுத்து, ராமச்சந்திரன், கருப்பையா, வேலம்மாள் தேர்வு செய்யப்பட்டனர்.

சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இங்கு புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் செயல்படுத்த வேண்டும். சிவகங்கை நகரில் சட்டக் கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை நகராட்சியில் கூடுதலாக தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். முத்துப்பட்டியில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள ஸ்பைசஸ் பார்க்கை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

More