முதல்வரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற அமைச்சர் தொழிலாளர் துறை சார்பில் 1,130 தொழிலாளர்களுக்கு ரூ.20.62 லட்சம் உதவித்தொகை

திருச்சி, டிச.3: தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியம் இதர 17 அமைப்புசாரா நலவாரிய தொழிலாளர்களில் 50,721 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிச.1ம் தேதி துவக்கி வைத்தார். தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் இதர 17 நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களில் கல்வி, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம் என சுமார் 1,130 தொழிலாளர்களுக்கு ரூ.20.62 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையை திருச்சி கலெக்டர் சிவராசு வழங்கினார். இந்நிகழ்வில் திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் பாலசுப்ரமணியன், திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன், உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தங்கராசு ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories:

More