மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறு சாலையில் திரியும் பன்றிகளை அப்புறப்படுத்தும் பணி துவக்கம்

திருச்சி, டிச.3: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்தினை உரிய முறையில் பராமரிக்கவும், சாக்கடைக் கட்டுமானங்களை பாதுகாத்து நோய் பரவுவதைத் தடுக்கவும், சுற்றித் திரியும் கால்நடைகளிலிருந்து பிரதான போக்குவரத்தினை இடையூறின்றி உறுதிப்படுத்தவும், குதிரை மற்றும் பன்றி வளர்ப்பதினை தடை செய்து கடந்த 2013ம் ஆண்டு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்து. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், பன்றிகள் பரோபரியாக சுற்றித் திரிந்து வருகின்றன. எனவே, திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பரோபரியாக சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணியை மாநகராட்சி துவங்கியுள்ளது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More