மாநகரில் 15 இன்ஸ்பெக்டர்கள், 12 எஸ்ஐக்கள் அதிரடி மாற்றம்

திருச்சி, டிச.3: திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் மாநகரில் பணியில் உள்ள 15 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 12 எஸ்ஐக்களை பணி மாறுதல் செய்து நேற்று உத்தரவிட்டார். இதில் இன்ஸ்பெக்டர்கள் கோட்டை குற்றப்பிரிவு அரங்கநாதன் கோட்டை சட்டம்-ஒழுங்கு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு நீலகண்டன் கோட்டை குற்றப்பிரிவு, காத்திருப்போர் பட்டியலில் இருந்த தனசேகரன் பொன்மலை சட்டம்- ஒழுங்கு, மாநகர குற்றப்பதிவேடு சேரன் கன்டோன்மென்ட் சட்டம்-ஒழுங்கு, ஐஎஸ் செக்யூரிட்டி ராஜேந்திரன் கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு, தில்லைநகர் சட்டம்-ஒழுங்கு மணிராஜ் உறையூர் சட்டம்-ஒழுங்கு, சைபர் கிரைம் சிந்துநதி தில்லைநகர் சட்டம்-ஒழுங்கு, பொன்மலை சட்டம்-ஒழுங்கு நிக்சன் நுண்ணறிவு பிரிவு, கன்டோன்மென்ட் சட்டம்-ஒழுங்கு சிவகுமார் வெடிகுண்டு தடுப்பு பிரிவு, கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு வேல்முருகன் சைபர் கிரைம் செல், கோட்டை சட்டம்-ஒழுங்கு தயாளன் ஐஎஸ் செக்யூரிட்டி, சைபர் கிரைம் செல் பரணிதரன் சீரியஸ் கிரைம் ஸ்குவார்டு மற்றும் எ.புதூர் சட்டம்-ஒழுங்கு, உறையூர் சட்டம்-ஒழுங்கு சண்முகவேல் சைபர் கிரைம், நுண்ணறிவு பிரிவு வனிதா ரங்கம் மகளிர் காவல் நிலையம், உறையூர் குற்றப்பிரிவு முருகவேல் மாநகர குற்ற பதிவேடு பிரிவிற்கு மாற்றப்பட்டனர்.

அதுபோல் எஸ்ஐக்கள் கோட்டை சட்டம்-ஒழுங்கு சிவசுப்ரமணியன் நுண்ணறிவு பிரிவு, சண்முகம் நுண்ணறிவு பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு செல்வம் கோட்டை சட்டம்-ஒழுங்கு, நுண்ணறிவு பிரிவு சிற்றரசு காந்தி மார்க்கெட் சட்டம்-ஒழுங்கு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு ராஜமாணிக்கம் கோட்டை சட்டம்-ஒழுங்கு, நுண்ணறிவு பிரிவு ராஜேந்திரன் கே.கே.நகர் குற்றப்பிரிவு, காந்தி மார்க்கெட் சட்டம்-ஒழுங்கு மதரசி ஸ்டெல்லா மேரி வெடிகுண்டு தடுப்பு பிரிவு, கே.கே.நகர் குற்றப்பிரிவு தாமோதரன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு, ரங்கம் மகளிர் காவல்நிலைய அம்சவள்ளி சீரியஸ் கிரைம்ஸ்குவார்டு, விபசார தடுப்பு பிரிவு ரமா சீரியஸ் கிரைம் ஸ்குவார்டு, வடக்கு போக்குவரத்து அன்னம்மாள் ரெனி சைபர் கிரைம் செல், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு விஜயகுமார் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர்.

Related Stories:

More