சாலை விபத்தில் என்ஐடி செக்யூரிட்டி பரிதாப பலி

திருவெறும்பூர், டிச.3: திருவெறும்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் என்ஐடி செக்யூரிட்டி பலியானார். திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர் பகுதி 2ஐ சேர்ந்த ராஜேந்திரன் மகன் கணேசன்(40). இவர் துவாக்குடியில் உள்ள என்ஐடி கல்லூரியில் செக்யூரிட்டியாக கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து துவாக்குடி அண்ணா வளைவு அருகே பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலை தடுப்புவேலியில் மோதியது. கீழே விழுந்து பலத்த காயமடைந்த கணேசன் அதே இடத்திலேயே பலியானார். தகவலறிந்த துவாக்குடி போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்தபோது கணேசனுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் விஜயலட்சுமி என்பவருடன் திருமணம் ஆனது தெரியவந்தது.

Related Stories:

More