திருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, டிச.3: திருச்செங்கோடு மாவட்ட திமுக அலுவலகத்தில், வரும் 6ம்தேதி காலை 10 மணிக்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடக்கிறது. இதில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள், தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இத்தகவலை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories: