பரமத்திவேலூரில் 6.10 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்திவேலூர், டிச. 3: பரமத்திவேலூர் அடுத்த வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 6,540 கிலோ கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.  கொப்பரையை கொள்முதல் செய்ய நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கடந்த வாரம் ஏலத்திற்கு விவசாயிகள் 8,635 கிலோ கொப்பரையை கொண்டு வந்தனர். கொப்பரை கிலோ அதிகபட்சம் 106.09க்கும், குறைந்தபட்சம் 80.89க்கும் சராசரியாக 92.99க்கும் ஏலம் போனது.

ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 11 ஆயிரத்து 346க்கு வர்த்தகம் நடந்தது. நேற்றைய ஏலத்தில் கொப்பரை கிலோ அதிகபட்சமாக 105.69க்கும், குறைந்தபட்சம் 91.69க்கும், சராசரியாக 99.85க்குமாக மொத்தம் 6 லட்சத்து 9 ஆயிரத்து 503க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கொப்பரை விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: