கொல்லிமலையில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு

சேந்தமங்கலம், டிச.3: நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளலாம்.  இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளாதவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள், உரிய விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து, தங்களுக்குான வாக்குச்சாவடி மையங்களில் அளிக்கலாம், கொல்லிமலை தாலுகாவுக்கு உட்பட்ட செங்கரை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட துவக்கப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தும் பணியை, கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பள்ளியில் உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை ஆய்வு செய்தார். தரமான உணவு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறதா என உறுதி செய்தார். இந்த ஆய்வின் போது, பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் ராமசாமி, தாசில்தார் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

More