களர்பதியில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

போச்சம்பள்ளி, டிச.3: மத்தூர் ஒன்றியம், களர்பதி கிராமத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா நிலம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு கிராம அளவில் தீர்வு காணும் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை தாங்கினார். தாசில்தார் இளங்கோ, துணை மண்டல தாசில்தார் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி கருணாநிதி, ஆர்.ஐ. சத்தியவாணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களிடமிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டது. அதில், 2 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. அதற்கான உத்தரவை துணை ஆட்சியர் அமீர்பாஷா வழங்கினார்.

Related Stories:

More