கிருஷ்ணகிரியில் 2 நாள் பிளம்பிங் பயிற்சிப்பட்டறை

கிருஷ்ணகிரி, டிச.3: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு மின் அமைப்பாளர் மத்திய சங்கம் மற்றும் இண்டர்நேஷனல் பிளம்பிங் ஸ்கில் கவுன்சில் சார்பில் 2 நாள் பயிற்சி பட்டறை நேற்று துவங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட செயலாளர் தாமோதரன், கிருஷ்ணகிரி கிளை தலைவர் சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஐ.பி.எஸ்.சி., அலுவலர் ஜான் ஐசக் கலந்து கொண்டு, பயிற்சி பட்டறை குறித்து விளக்கி பேசினார். முகாமில் பங்கேற்போருக்கு சான்றிதழும், ₹500 உதவித்தொகையும் வழங்கப்படும். அரசின் ₹1 லட்சம் காப்பீடும் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பழனி, இளங்கோ, ஈஸ்வரமூர்த்தி, சங்கர், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More