உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்

தர்மபுரி, டிச.3: பெரும்பாலையில் உள்ள தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி பள்ளியில், மாநில திமுக வர்த்தகர் அணி சார்பில், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு இனிப்பு, நோட்டு புத்தகம் அடங்கிய பை மற்றும் அசைவ உணவு நேற்று வழங்கப்பட்டது. மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் தர்மசெல்வன் தலைமை வகித்தார். தொடர்ந்து, பயிற்சி மையத்தில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதியம் அசைவ உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சோலை மணி, வைத்திலிங்கம், சிக்கண்ணன் (எ) குமார், சின்னசாமி, சின்னசாமி, உமாசங்கர், தலைமை ஆசிரியர் ஸ்ரீராமலு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More