தர்மபுரி அருகே பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

தர்மபுரி, டிச.3: தர்மபுரி மாவட்டம், மூக்கனஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், இலவச எண் 181 குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மதிகோன்பாளையம் போலீசார் மாணவ, மாணவிகளுக்கு 181 எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவ, மாணவிகளுக்கு பொது இடங்கள், பள்ளி, வீடுகளில் மனரீதியாகவோ, தொலைதொடர்பு சாதனங்கள் வழியாகவோ யாராவது இடையூறு செய்தால் உடனடியாக 181 என்ற இலவச எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் சின்னமாது, எஸ்ஐ கிருஷ்ணவேணி, ஆசிரியர்கள் விக்கிரமன், தமிழரசன், மோகனசுந்தரி, சுபாஷினி, சுப்புலெட்சுமி, வெங்கடேசன் மற்றும் தசரதன், மலையப்பன், தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More