சூதாடிய 2 பேர் கைது

தர்மபுரி, டிச.3: மாரண்டஅள்ளி சி.எம்.புதூர் பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், மாரண்டஅள்ளி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சூதாடிக் கொண்டிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர். முருகன், வெங்கடாசலம் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் மற்றும் 5 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More