சிறுமி பலாத்காரம் பனியன் அதிபர் கைது

திருப்பூர், டிச.3: திருப்பூரில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பனியன் நிறுவன உரிமையாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருப்பூர் முருகம்பாளையம் முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (33). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் அதே பகுதியை சேர்ந்த 16வயது சிறுமி கொரோனா விடுமுறை காலத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை சரவணன் அத்துமீறி உள்ளார்.

இந்நிலையில் சிறுமிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படவே, மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் சரவணன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.  இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய  போலீசார் பனியன் அதிபர் சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Related Stories:

More