மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர்.டிச.3: திருப்பூர் பல்லடம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பல்லடம் பகுதியை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஒருவரை கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(24). என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் 2019ம் ஆண்டு சந்தோஷ்குமார் அந்த மாணவியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் சாதியின் பெயரை சொல்லி திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தற்கொலைக்கு தூண்டிய சந்தோஷை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில்  நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் குற்றம் சாட்டப்பட்ட சந்தோசுக்கு 10 ஆண்டு மற்றும் ஆயுள் தண்டனை வழங்கி தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

Related Stories:

More