வெள்ளத்தில் சிக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி

உடுமலை, டிச. 3: வெள்ளத்தில் சிக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். உடுமலை அருகேயுள்ள அணிக்கடவு கிராமத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மகன் செல்வகுமார். இருவரும் கடந்த நவம்பர் 17-ம்தேதி மினிஆட்டோ அப்பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்றனர். வாகதொழுவு கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள தரைப்பாலத்தில் சென்றபோது, கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் மினிஆட்டோவுடன் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்த குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கிரி, உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பொதுமக்களும், தீயணைப்பு வீரர்களும் சேர்ந்து செல்வகுமாரை உயிருடன் மீட்டனர். சின்னச்சாமி இறந்துவிட்டார். இதையடுத்து, சின்னச்சாமியின் குடும்பத்துக்கு நிவாரண தொகை வழங்க கலெக்டர் பரிந்துரைத்தார். அதன்படி, தளி பேரூராட்சியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், சின்னச்சாமியின் குடும்பத்தினரிடம் ரூ.4 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் வினீத், திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், அணிக்கடவு கிரி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

More