சட்டவிரோதமாக பார் நடத்திய 4 பேர் கைது

அவிநாசி,டிச.3:அவிநாசி புதிய பஸ் நிலையம் மற்றும் அவிநாசி கால்நடை மருத்துவமனை அருகே, மொண்டிநாதம் பாளையம் பிரிவு அருகே மற்றும் கந்தம்பாளையம் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சட்டவிரோதமாக பார் நடத்தி வருவதாக அவிநாசி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.  இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் அங்கு சட்டவிரோதமாக பார் நடத்திய,  தஞ்சாவூரை சேர்ந்த விமல்ராஜ் (32), கோவை கோவில் மேடு பகுதியை சேர்ந்த வீரபாண்டியன்(37), சிவகங்கையை சேர்ந்த அர்ஜுனன் (39)மற்றும் ஜெயசீலன் (29) ஆகிய 4 பேரை அவிநாசி போலீசார்  கைது செய்தனர்.

Related Stories:

More