விதவை, ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்க வேண்டுகோள் ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி அரசின் வழிகாட்டுதல் மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

கரூர், டிச. 3: கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸின் மாறுபட்ட வடிவமான ஒமிக்ரான் வைரஸ் தற்போது பரவி வருவதால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு நோய் பரவுதலின் தீவிரதத்தை கட்டுப்படுத்த அனைத்து பொதுமக்களும் வெளியில் செல்லும் போது, முகக்கவசம் அவசியம் அணிய வேண்டும். காய்கறிக்கடை, மளிகைக்கடைகள், பணியாற்றும் இடங்கள் போன்ற பொது இடங்களில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நோய் தொற்று ஏற்பட்டு வீட்டில் இருப்பவர்கள் பாதுகாப்புடனும், வெளியில் வராத வகையிலும், தன்னால் பிறருக்கு தொற்று ஏற்படாதவாறு சமூக சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டும். மக்கள் தேவையான பொருட்களை அருகில் உள்ள கடைகளிலேயே வாங்கிக் கொள்ள வேண்டும். வெகு தூரம் செல்வதை தவிர்க்க வேண்டும்.

வீட்டை விட்டு வெளியே சென்று திரும்புவர்கள் வீட்டில் உள்ள நபர்களுக்கு தொற்றாமல் இருக்க முறையாக சோப்பினால் கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்றவற்றை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இந்த நிலையில் திருவிழாக்கள், திருமணம், விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்லுதல், அவர்களை வீட்டுக்கு அழைத்து வருதல், பிற பகுதிகளில் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வணிக நிறுவனங்கள், மளிகைக்கடை, காய்கறி கடைகள், கறிக்கடைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியுடன் சானிடைசர் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், வாகனங்களில் செல்லும் போதும் முறையாக முகக்கவசம் அணிய வேண்டும். மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: