வெள்ளத்தால் பாதித்த வெள்ளி வாயல் கிராமத்தில் ஊராட்சித்தலைவர் உணவுபொருள் வழங்கினார்

பொன்னேரி: வெள்ளி வாயல் கிராமத்தில் மீண்டும் வெள்ள நீர் புகுந்ததால், ஊராட்சி மன்ற தலைவர் வீடு வீடாக சென்று உணவு பொருள் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட வெள்ளிவாயல் விச்சூர் உள்ளிட்ட பகுதிகள் வடகிழக்கு பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கினால் தத்தளித்தன. இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றில் 2வது முறையாக நேற்றுமுன்தினம் 25 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால்,  வெள்ளநீர் கிராமங்களுக்குள் புகுந்தது. பெரிதும் அவதிக்குள்ளான வெள்ளி வாயல் ஊராட்சிக்குட்பட்ட சுமார் 800 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் ரொட்டி உள்ளிட்ட உணவுப்பொருட்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வீடு வீடாக சென்று ஊராட்சி மன்ற தலைவர் சதா கிராம மக்களுக்கு வழங்கினார். இதில், தலைவர் சதாவுடன், ஊராட்சி செயலர் ஏழுமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள், வெள்ளிவாயல் கிராம இளைஞர்கள் உடன் இருந்தனர்.

Related Stories:

More