2300 குடியிருப்புகளுக்கு சாக்கடை குழாய் இணைப்பு வழங்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

கோவை, டிச. 3:  கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில்  2300 குடியிருப்புகளுக்கு உடனடியாக சாக்கடை குழாய் இணைப்பு வழங்க கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார் கோவை ராமநாதபுரம் சிக்னஸ் அருகில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், சிங்காநல்லூர் பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணிகள், கழிவுநீர் பண்ணையின் மூலம் சுந்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துதல் ஆகிய பணிகளை கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜா கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இதனை தொடர்ந்து மணியகாரன்பாளையம் முதல் ஒண்டிப்புதூர் வரை 221 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை பிரதான குழாய் அமைக்கும் பணிகளையும், 24x7 குழாய் அமைக்கப்படவுள்ள இடத்தையும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

ஒண்டிப்புதார், நெசவாளர்  காலனி பகுதியில் தற்போது முடிக்கப்பட்ட பாதாள சாக்கடை பிரதான குழாய் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. தற்போது சோதனை ஓட்டம் செய்து 2300 குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கிட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என  பொறியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.  இந்த ஆய்வின்போது, மாநகரப்பொறியாளர் ராமசாமி, கிழக்கு மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமார் ரத்தினம், நிர்வாக பொறியாளர் (பாதாள சாக்கடை திட்டம்) உமாதேவி, உதவி நிர்வாக பொறியாளர் சசிப்பிரியா, உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன், மண்டல சுகாதார அலுவலர் முருகா, உதவி செயற்பொறியார்கள் ஏழில், பெர்மன் அலி, சத்யா, ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: