கூட்டுறவு வங்கி பொதுப் பேரவை கூட்டம்

ஈரோடு, டிச.3: ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 41-வது பொதுப் பேரவை கூட்டம் பவானி பவிஷ் பார்க்கில் நடைபெற்றது.  வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். இயக்குநர் பெரியார் நகர் இரா.மனோகரன்  வரவேற்றார்.  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து வங்கி ஆண்டறிக்கை மலரினை வெளியிட்டு பேசினார்.  கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இ.திருமகன் ஈவேரா, மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, முன்னாள் எம்எல்ஏக்கள் பாலகிருஷ்ணன், ஆர்.என்.கிட்டுசாமி, கே.எஸ்.தென்னரசு, வங்கி மேலாண்மை இயக்குநர் மரு.சு.செந்தமிழ்செல்வி, திருப்பூர் மண்டல இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், நபார்டு ஈரோடு மாவட்ட வளர்ச்சி மேலாளர் டி.அசோக்குமார், இயக்குநர்கள் டி.ராமசாமி, வி.எம்.லோகநாதன், செல்வி முருகேசன், வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி, திருப்பூர் சரக துணைப்பதிவாளர் எ.பி.முருகேசன், வங்கி முதன்மை வருவாய் அலுவலர் இரா.இராமநாதன், பொது மேலாளர் ஆர்.ரவிச்சந்திரன், மற்றும் வங்கி இயக்குநர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், செயலாளர்கள், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வங்கியின் துணைத்தலைவர் பி.கேசவமூர்த்தி நன்றி கூறினார்.

Related Stories:

More