மழை வெள்ளத்தால் பாதிப்பு கடலூர் மாநகராட்சியில் 70 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கல்

கடலூர், டிச. 2:  வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள பெருக்கும், இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்புகளும் ஏற்பட்டது. கடலூர் மாநகராட்சி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் பொது மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை 30,000 பேருக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பால் முகாம்களில் தக்க வைக்கப்பட்டும், பலர் வீடுகளிலேயே முடங்கி கிடந்த நிலையில் நேரடியாக அவர்களுக்கு இல்லம் தேடியும் முகாம்களை நாடி சென்றும் உணவு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை பாதிப்புக்குள்ளான கடலூர் மாநகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடியிருப்பை சேர்ந்த 195 நகர பகுதியில் பாதிப்புக்குள்ளான 40 ஆயிரம் பேருக்கு மூன்று வேளை உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி தரப்பினர் தெரிவித்தனர். 70 ஆயிரம் பேருக்கு இதுவரை உணவு வழங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து வீடுகளுக்கு செல்ல முடியாமலும் உணவு தயாரிக்க முடியாமலும் உள்ளவர்களுக்கு உணவு வழங்கும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளதுஇது குறித்து மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில், கடலூர் மாநகரில், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உணவு வழங்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது, என்றார்.

Related Stories: