காவல்நிலையத்தில் டிஐஜி ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம், டிச. 2: ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவல்நிலைய வழக்கு பதிவேடுகள், ஆயுதங்கள், அரசு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டார். பின்னர் காவல்நிலையத்தில் உள்ள கைதி அறை, கண்காணிப்பு கேமரா, காவல்நிலையத்தில் வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியனவற்றை பார்வையிட்டார். ஆய்வின் போது டி.ஐ.ஜியிடம்  காவல்நிலையம் துவங்கப்பட்டு 75ஆண்டுகள் ஆகியும் அப்போது உள்ள காவலர்கள் எண்ணிக்கை தான் தற்போது உள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பு, குற்ற நடவடிக்கை அதிகரிப்பு ஆகியன உள்ளது. அதற்கேற்ப காவலர்களை அனைத்து காவல்நிலையங்களிலும் உயர்த்த வேண்டும்.  தமிழக அரசு காவலர், தலைமை காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுப்பு வழங்கியுள்ளது.

இதுபோன்று காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றனர். அதற்கு டிஐஜி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி சுந்தரம், முஷ்ணம் காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக முஷ்ணம் பூவராகசுவாமி கோயிலுக்கு சென்று டிஐஜி தரிசனம் செய்தார். காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் நேற்று விழுப்புரம் சரக காவல் துணை தலைவர் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் உள்ள முக்கிய கோப்புகள், குற்ற சம்பவங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை ஆய்வு செய்தார். மேலும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துதல் குறித்து ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

Related Stories: