ஜெயப்பிரியா மெட்ரிக் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி

விருத்தாசலம், டிச. 2: விருத்தாசலம் வட்டம் கோபாலபுரத்தில் அமைந்துள்ள ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தினம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தாளாளர் ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் முருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தாளாளர், ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கேற்ப குழந்தைகள் வாழ்வில் பெரியோர் சொல் கேட்டு ஒழுக்க நெறிமுறைகளை கடைபிடித்து நோயின்றி வாழ்ந்து வீட்டையும் நாட்டையும் முன்னேற்ற பாடுப்பட வேண்டும், என அறிவுறுத்தினார். அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் மாணவ, மாணவிகளை எய்ட்ஸ் குறியீடு வடிவில் அமர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி, சுகாதார ஆய்வாளர் முருகவேல், வட்டார நம்பிக்கை மைய ஆலோசகர் தங்கமணி, ஆய்வக நுட்புனர் சிவக்குமார், ஆசிரிய, ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் நிர்மல் நன்றி கூறினார்.

Related Stories:

More