பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

உளுந்தூர்பேட்டை, டிச. 2: உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் காய்கறி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற வாரச்சந்தையின்போது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என்றும், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிளாஸ்டிக் பைகளில் காய்கறிகளை வாங்கி வந்தவர்களுக்கு துணி பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வின்சென்ட், திலீப், அன்பழகன், வெங்கடாஜலபதி, முத்துக்குமாரசாமி, முருகன், ரவி, நகராட்சி மேற்பார்வையாளர்கள் தமிழ்மணி, சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More