கீழ்வேளூர் அருகே ராதாமங்கலத்தில் காடு வளர்ப்பு திட்டத்திற்காக விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கல்

கீழ்வேளூர், டிச.2: புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் கீழ்வேளூர் பகுதியில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானம், வேலை வாய்ப்பு கிடைக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புறச் சூழலை பாதிகாத்திடவும், பசுமை சூழலை உருவாக்கிடும் திட்டமான ஆண்டு முழுவதும் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்திதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டாரத்தில் 35,000 மரக்கன்றுகள் வேளாண்மை துறையின் பரிந்துரையின் பேரில் வனத்துறையின் மூலம் வழங்கப்பட்டு, விவசாய நிலங்களில் வரப்பு மற்றும் தனியாக உள்ள நிலங்களில் நடவு செய்து மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் வேம்பு, தேக்கு ரோஸ்வுட், ஈட்டி, மகாகனி போன்ற மரக்கன்றுகள் வனத்துறையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

இதையடுத்து கீழ்வேளூரை அடுத்த ராதாமங்கலம் கிராமத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் ரெங்கா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் கண்ணன், உதவி வேளாண்மை அலுவலர் காளிதாஸ், எழிலரசி, பழனிச்சாமி, ரஞ்சனி, ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: