அடைபட்டுக்கிடந்த வடிகால் குழாய் திறப்பால் தண்ணீர் வடிய துவங்கியது உர பரிந்துரையுடன் கூடிய மண்வள அட்டையை பெற்று விவசாயிகள் பயன்பெற வேண்டும்

நாகை, டிச.2: மண்வள அட்டை பரிந்துரையின்படி பயிர்களுக்கு உரம் இட வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குநர் பன்னீர்செல்வம் ஆலோசனை தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு 64 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயிருக்கு தேவையான மண் வளமும், நீர் வளமும் போதுமான அளவு இயற்கையாகவே உள்ளது. இருப்பினும் மண்வளத்தை பரிசோதனை செய்தால் எந்த சத்துக்கள் குறைவாக உள்ளது.

எந்த சத்துக்கள் அதிகமாக உள்ளது என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும். இதனால் தேவையற்ற உரம் செலவு குறையும். பாஸ்போபாக்டீரியா அதிக அளவில் பயன்படுத்துவதால் மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிசத்து கிடைக்கும். அசோஸ்பைரில்லம் இடுவதால் 25 சதவீதம் தழைச்சத்து தேவையை குறைத்து கொள்ளலாம். ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் தழைச்சத்து அதிகமாகி பூச்சி தாக்குதல் அதிக அளவில் ஏற்பட்டு பயிர் அறுவடை செய்யும் நேரத்தில் பயிர் சாயும் நிலை ஏற்படும்.

எனவே மண்வளத்தை சீர்செய்யும் பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க மண்வளம் அவசியம் ஆகும். மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு நிலத்திற்கு நிலம் மாறுபடும். பயிர் ரகங்களுக்கு தேவையான சத்துக்களின் அளவு ரகத்திற்கு ஏற்ப வேறுபடுதாலும் மண்பரிசோதனை செய்து அதில் உள்ள சத்துக்களுக்கு ஏற்ப உரமிட வேண்டும். மண்வள அட்டையில் விவசாயிகளின் மண்ணின் நயம், கார அமிலதன்மை, தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் நுண்சத்துக்களின் அளவுகள் தெளிவாக வழங்கப்படும்.

விவசாயிகள் தங்கள் மண்ணிற்கு இட வேண்டிய உரங்களின் விவரங்கள், சாகுபடி செய்ய வேண்டிய பயிர்களின் விவரங்கள் அதில் அளிக்கப்படும். இதனால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் மேலாண்மை செய்வதால் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைவதுடன் மகசூல் அதிகரிக்கும். எனவே மண்பரிசோதனை செய்யும் விவசாயிகள் நாகை மண்பரிசோதனை நிலையத்தில் தங்கள் வயல் மாதிரிகளுடன் ரூ.20 கட்டணம் செலுத்தி உரப் பரிந்துரையுடன் கூடிய மண்வள அட்டையை பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: